தெற்காசிய தொழிற்சங்கங்கள் ஒருமித்த நோக்கோடு செயற்பட வேண்டும்- ஜீவன்

87 0

தெற்காசியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்த நோக்கோடு புத்தாக செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா புதுடில்லியில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின், தெற்காசிய தொழிற்சங்க கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

தொழிலாளர்கள் முன்னோப்போதும் இல்லாத வகையிலான புதிய சவால்களை இன்றைய நவீன உலகில் எதிர்கொள்கின்றனர்.

டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு திறனின் அறிமுகம், கிக் பொருளாதாரம் போன்றவற்றிற்கு ஏற்புடையதாக தொழிற்சங்கங்கள், மரபுவழி அணுகுமுறையில் இருந்து நவீன தொழில்நுட்ப உள்ளடக்கங்களை கொண்ட பொறிமுறையை உள்வாங்க வேண்டும்.

மேலும், பிராந்தியத்தின் பலதரப்பட்ட தொழிலாளர்களை திறம்பட பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கங்களுக்குள்ளேயே பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை அடைவது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.

தொழிற்சங்கங்கள் அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

எல்லைகளுக்கு அப்பாற்பட்ட தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதற்காக ஒன்றிணைந்து செயற்படவும் அழைப்பு விடுத்தார்.