பிரித்தானியாவின், லீட்ஸில் பிரதேசத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லீட்ஸில் பிரதேசத்திற்க்கு உட்ப்பட்ட ஹரேஹில்ஸ், ஹில் டாப் அவென்யூ-வில் ஆண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அந்நாட்டு பொலிஸார் சென்றுள்ளனர்.
இதன்போது, 11.06 மணியளவில் பேக் ஹில் டாப் அவென்யூவில் கண்டுபிடிக்கப்பட்ட நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இரண்டாவது நபர் அதற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் சிறுது நேரத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கையில் சிறிய காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட 46 வயதுடைய மூன்றாவது நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, அவர் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 48 வயதுடைய மற்றொரு நபரும் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் விசாரணையின் ஒற்றை பகுதியாக சிறப்பு தேடுதல் மற்றும் தடயவியல் பரிசோதனை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.