நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் தவிர 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரின், போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர் அறிவுறுத்தலின் பேரில் குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
குன்னூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகளை முடிந்து 9 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலமாக கடையம் கொண்டுவரப்பட்டது. சுமார் 12 மணி நேர பயணத்திகு பிறகு சாலை மார்க்கமாக உடல்கள் தென்காசி மாவட்டம் கடையம் வந்தடைந்தது. உயிரிழந்தவர்களில் உடல்களை பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை அந்தந்த பகுதிகளில் தகனம் அல்லது அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.