முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா 20ஆம் திகதியே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் !

92 0

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டுச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா 20ஆம் திகதியே நாட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டார் என்று புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் கொழும்பில் உள்ள மூன்று ஆங்கிலமொழி அல்லாத வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

நீதிபதி சரவணராஜா இப்போது எங்கே இருக்கின்றார் என்பதை இலங்கை உளவுப் பிரிவு தேடுகின்றது, மற்றும் இந்திய உளவுப் பிரிவும் தேடுகின்றது என நிலாம்டீன் கூறினார்.

மேலும், மிகவும் சிறப்பாக செயற்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார். அவர் முதலில் சிங்கப்பூர் சென்றிருக்கின்றார்.

கொழும்பிற்குச் சென்று தனது வாகனத்தை விற்ற நீதிபதி சரவணராஜா, மிக முக்கிய விஐபி ஒருவரின் வாகனத்தையே தனது தேவைக்காகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.