புத்தளத்தில் அதிவேகமாக வந்த முச்சக்கரவண்டி ஒன்று பாதசாரி கடவையில் பயணித்த கர்ப்பிணிப் பெண் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய தாதி ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.பணி நிமித்தமாக வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார்.