மன்னாரில் சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

126 0
மன்னார் – முருங்கன் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மன்னார் முருங்கன் பகுதியில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த பாரிய ஐஸ் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் வெற்றிகரமான சுற்றிவளைப்பின் மூலம்  முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 178.75 கிராம் நிறை கொண்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இக்கடத்தலில் ஈடுபட்ட முக்கிய வியாபாரி அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார். எனினும், கடத்தலை மேற்கொண்ட முருங்கன் பிட்டி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மற்றுமொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய நபர் மற்றும் கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.