ஊர் மக்களின் ஒன்றுபட்ட முயற்சியால் வெற்றிகரமாக நிறைவடைந்த வீதி மீள்நிர்மாணம்

74 0
மாத்தளை மாவட்டம் கலேவல பிரதேசத்தில் உள்ள ‘எலமல் பொத’ ஊருக்கான பாதை பல வருட காலமாக சீரமைக்கப்படாத நிலையில் இருந்தது.

எலமல் பொத ஜும்ஆ பள்ளி நிர்வாகம் மற்றும் இஸ்லாமிய நலன்புரி சங்கம் இணைந்து ஊர் மக்களின் பண உதவியுடனும் சிறுவர்கள், வாலிபர்கள் மற்றும் வயோதிபர்களின் முயற்சியுடனும் சுமார் 2 கி.மீ தூரம் வரையில் பாதையை புதிதாக நிர்மாணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.