அநுராதபுரத்துக்கு யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது காட்டு யானை தாக்குதல்!

97 0

அநுராதபுரம் – தந்திரிமலை பிரதான வீதியின் மணிங்கமுவ – ஓயாமடுவ பிரதேசத்தில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றை காட்டு யானை தாக்கியுள்ளது.

நேற்றிரவு (30) இடம்பெற்ற தாக்குதலில் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறையிலிருந்து அநுராதபுரம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது இந்த காட்டு யானை தாக்கியுள்ளது.

இந்த யானை அப்பகுதியில் பல உயிர்களை கொன்றுள்ளதுடன், வீடுகளுக்கும் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்கு முன்னரும் வீதியில் செல்லும் வாகனங்களை தாக்கியுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.