சா/த, உ/த பரீட்சைகளுக்கு பின் விசேட திட்டம்

108 0

கல்விப் பொதுத்தராதர , உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி பாட நெறிகளை விரைவில் ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் நிறைவு செய்த மாணவர்களுக்கே தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.