ஓய்வுபெற்ற இராணுவப் பிரிவு பொறியியலாளர் துறவு வாழ்க்கை! – குத்திக் கொலை!

79 0

பொத்துஹெர லிஹினிகிரிய பிரதேச விஹாரை ஒன்றில் வசித்து வந்த தேரர் ஒருவர் 29ஆம் திகதி இரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொத்துஹெர பரபாவில பிரதேசத்தில் இவருக்குச் சொந்தமான தனியார் வீடு ஒன்றில்  வைத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேரர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பொறியியலாளர் என தெரிவிக்கப்படுகிறது.

64 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் துறவு வாழ்க்கையில் நுழைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவர் திருமணமானவர் என்பதும் அவரது மனைவி சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் அவரை விட்டுச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக  பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.