இரணைமடு செல்வதற்கு வெளிநாட்டு ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கும் கடற்படை

135 0
image
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புகைப்பட ஊடகவியலாளர் (Photo journalist) ஒருவர் தான் இரணைமடுவுக்கு செல்வதை கடற்படையினர் தடுத்து வருகின்றனர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

எல்கே ஸ்காலியர்ஸ் என்ற அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கைக்கு நான் ஊடகபணிக்காக விஜயம் மேற்கொண்டுள்ளேன் இரணைதீவிற்கு ஊடகபடப்பிடிப்பாளராக நான் செல்வதை கடற்படையினரும்  முழங்காவில் உள்ள பாதுகாப்பு தரப்பினரும் தடை செய்கின்றனர்.

நான் அந்த தீவிற்கு செல்வதற்கான அங்கு சட்டபூர்வமாக பணியாற்றுவதற்கான அனுமதியை பெற்றிருந்தேன் .

டுவிட்டரில் பதிவிடவேண்டாம் என கடற்படையினர் என்னை கேட்டுக்கொண்டனர்.

நான் முழங்காவிலிற்கு காலை 7.15க்கு வந்து சேர்ந்தேன் – தற்போது 12 மணியாகிவி;ட்டது

நான் குறிப்பிட்ட அதிகாரிகளிற்கு பல மின்னஞ்சல்களை அனுப்பிவிட்டேன்  அவர்கள் தொடர்ச்சியாக எனக்கு தவறான மின்னஞ்சல்களை அனுப்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.