வீடு ஒன்றில் தங்கியிருந்த இளைஞர் சடலமாக மீட்பு!

75 0

வாடகை அடிப்படையில் வீடு ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (30) மாலை ஹொரணை, பண்டாரவத்தை, பொக்குனுவிட்ட பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் பெத்திகமுவ கந்த, ஹல்தொட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.