மொஸ்கோ சென்றடைந்தார் ஜனாதிபதி

318 0

ரஸ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவின் மொஸ்கோ வானுர்தித் தளத்தை சென்றடைந்தார்.

இதன்போது அந்த நாட்டு பிரதி வெளிவிவகார அமைச்சர் உட்பட்ட அரச அதிகாரிகள் குழு ஜனாதிபதியை வரவேற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.

43 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அரச தலைவர் ஒருவர் ரஸ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னதாக 1974ஆம் ஆண்டு இலங்கையின் முன்னாள் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயக்க குமாரதுங்க ரஸ்யாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை மொஸ்கோவின் க்ரம்ப்லின் மாளிகையில் சந்திக்கவுள்ளார்.

இதன்போது ஜனாதிபதிக்கும் ரஸ்ய ஜனாதிபதிக்கும் இடையில் பொருளாதார், வர்த்தக, மற்றும் அரசியல் நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பல புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.