மத்தல விமானநிலையம் , அம்பாந்தோட்டை துறைமுகம் பெயர் மாற்றத்திற்கு ரணில் எதிர்ப்பு!

373 0

Mattala-MRIAமத்தல விமானநிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் பெயர்ப்பலகையில் பொறிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷவின் பெயரினை நீக்குவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

அம்பாந்தோட்டையைச் சேர்ந்த ஐதேக மற்றும் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே குறித்த கோரிக்கையை முன்வைத்தனர்.ஆனால் அதற்கு மகிந்த ராஜபக்ச உடன்படவில்லை என்று நாடாளுமன்ற வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்னிலையில், ராஜபக்ஷ அனைத்துலக சர்வதேச விமானநிலையம், அம்பாந்தோட்டை ருகுணு மாகம்புர ராஜபக்ச துறைமுகம் போன்ற பெயர்கள் பெயர்ப்பலகையிலிருந்து நீக்கப்படவேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இதற்கு ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய் வெளியிட்டுள்ளது.