இறுதிக் கட்ட யுத்தத்தில் ஐநா தொடர்பான விமர்சனங்கள் நியாயமானவை

388 0

helen-clark-400-seithyசிறீலங்காவில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் ஐநா நடந்துகொண்ட விதம் தொடர்பாக எழுப்பப்பட்ட விமர்சனங்கள் நியாயபூர்வமானவை என ஜ.நா செயலாளர் நாயகம் பதவிக்கான முன்னணி வேட்பாளர் ஹெலன் கிளார்க் தெரிவித்துள்ளார்.வன்முறை, தீவிரவாதம் மற்றும் சர்வதேச பாதுகாப்பின்மை போன்ற அடிப்படைக் காரணங்களுக்கெதிராகப் போராடுவது போன்ற சிறப்பான பணிகளை ஐநா மேற்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் நிகழ்ச்சித்திட்டத்தின் அபிவிருத்திப் பணிப்பாளராகத் தான் பதவியேற்று ஒரு மாதத்தின்பின்னர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.ஐநா சபையினர் செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புக்கள் நடை பெறவுள்ள நிலையிலேயே கெலன் கிளார்க் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹெலன் கிளார்க் கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து ஜ.நாவின் மிக முக்கியமான திணைக்களங்களில் ஒன்றான ஜ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவராக பதவி வகித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.