கைக்குண்டு தாக்குதல்; நால்வர் விடுதலை

100 0

நுவரெலியாவின் முன்னாள் மேயரும் சட்டத்தரணியுமான நளின் திலக்க ஹேரத்தின் இல்லத்தின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய நான்கு பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா விமலசிறி இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.

சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு மேயரின் செயலாளரின் மரணத்தில்  ஏற்பட்ட மோதலால் இந்த கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுமார் மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த இந்த வழக்கு நேற்று முடிவடைந்துள்ளது.