புதிதாக மீள்குடியேறிய சமூகங்களுக்கு நோர்வேயிடமிருந்து நிதியுதவி

392 0

Norway - UNDPயாழ்ப்பாணம்  மற்றும்  திருகோணமலை  மாவட்டங்களில் அண்மையில்  மீள்குடியேறிய சமூகங்களுக்கு நோர்வே அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக உதவுவதற்கான  உடன்படிக்கையை  இலங்கை  மற்றும்  மாலைதீவுக்கான  நோர்வேஜியத் தூதுவர்  தூர்பியோன்  கவுஸத்சேத்த  மற்றும் இலங்கைக்கான ஐக்கிய  நாடுகள்  சபையின் பதில்  வதிவிடப்  பிரதிநிதி  லொவிட்டா  ராம்குட்டி  ஆகியோர்  கைச்சாத்திட்டனர்.
இதற்கு நோர்வே வழங்கும் நிதியுதவி 142 மில்லியன் இலங்கை ரூபாய்களாகும்.
இவ்வுதவியானது சமூக  மட்டத்தில் பொருளாதார  வாய்ப்புகளை  மீள்தகவமைக்கக்  கூடியதிறன்  பயிற்சிகள்,  உபகரணங்கள்,  விதைகள்,  அவசியமான  கட்டுமானங்கள்  மற்றும் அதிகரிக்கின்ற   உள்ளுர்   வேலைவாய்ப்புக்கள் ஆகியவற்றுக்கான   வாய்ப்புக்களை வழங்குவதனூடு குறித்த  சமூகங்களில் விவசாயம்,  மீன்பிடி, கால்நடை மற்றும்  மாறுபட்ட வருவாய்  ஈட்டும்  செயற்பாடுகள் ஆகியவற்றினூடு நின்றுநிலைக்கக்கூடிய  வாழ்வாதார வாய்ப்புக்களை உருவாக்க  திட்டமிடுகிறது.
இவ்வுதவியானது  இரண்டு  மாவட்டங்களில் இருந்தும் 1000 நேரடிப் பயனாளிகளைச் சென்றடைய எதிர்பார்க்கிறது.
2015  நவம்பரில் யாழ்ப்பாண  மாவட்டத்தின்  வளலாய்  மற்றும்  தெல்லிப்பழை  பகுதிகளில் புதிதாக மீளக்  குடியேறிய சமூகத்தினர்  தங்கள்  வாழ்வாதார  நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாகநோர்வே அரசாங்கம் 67 மில்லியன் இலங்கை ரூபாய்களை வழங்கியது