பிரேசிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரேசிலின் நீதி அமைச்சர் அலக்சாண்டர் டி மொராயஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 5ம் திகதி ரியோ டி ஜெனோரியோ நகரில் இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின்றன.
இதன் போது பல்வேறு தாக்குதல்களை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவானர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த தாக்குதல் குறித்த இலக்கொன்றுடன் அவர்கள் செயல்படவில்லை என்றும், முதிர்ச்சியற்றவர்களாக காணப்படுகின்றமையும் தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.