மருந்து கொள்வனவு தொடர்பில் ஆராயும் உப குழு முதல் முறையாக புதன்கிழமை கூடுகிறது

176 0

மருந்துப் பற்றாக்குறை மற்றும் மருந்துக் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்காக பொதுக் கணக்குக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு எதிர்வரும் புதன்கிழமை முதல் முறையாக கூடவுள்ளது.இந்த சந்திப்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக உப குழுவின் தலைவர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, அசோக் அபேசிங்க, ஜயந்த கெட்டகொட மற்றும் ஹரினி அமரசூரிய ஆகியோர் உப குழுவின் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பான முழுமையான அறிக்கையை கோபாவிடம் ஒப்படைக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, சுகாதார அமைச்சுக்குள் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக மற்றுமொரு உப குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தலைமையிலான இந்த உப குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான இசுரு தொடங்கொட, விமலவீர திஸாநாயக்க, மஞ்சுள திஸாநாயக்க, வீரசுமன வீரசிங்க மற்றும் முதித பிரஷாந்தி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.