கடற்தொழிலுக்காக செல்லும் தமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவினரை அனுப்ப வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோரியுள்ளது.
அந்த கட்சியின் நிறுவுனர் எஸ். ராமதாஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமிழக மீனவாகள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்படுகின்றனர்.
சிலவேளைகளில் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர்.
இலங்கை அரசை இந்தியா தொடர்புகொண்டு கலந்துரையாடியிருந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டிருக்காது.
தமிழக மீனவர்கள் விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் அசமந்த போக்கை கடைபிடிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
எனவே கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுவை அனுப்புவது குறித்து ஆராய வேண்டும் எனவும் எஸ். ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.