சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.எம். கருணாரத்ன சிசிர குமார சேனவிரத்ன என்ற 59 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
நேற்று (23) இரவு சீப்புக்குளம் பகுதியில் விவசாயப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கிராமிய நெல் திருவிழாவையடுத்து, அருகில் உள்ள வீடொன்றில் விருந்துபசாரம் இடம்பெற்றது.
இந்த விருந்தின்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையிலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.