ஆப்கானிஸ்தான்: கார் குண்டு தாக்குதலில் 6 போலீசார் உடல்சிதறி பலி

289 0

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டுத் தாக்குதலில் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த 6 அதிகாரிகள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டுத் தாக்குதலில் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த 6 அதிகாரிகள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹெல்மண்ட் மாகாணத்தின் தெற்கு பகுதியில் அந்நாட்டு போலீஸ் புலனாய்வு படையினரின் சோதனைச் சாவடி உள்ளது. நேற்று இச்சாவடியில் அதிகாரிகள் தங்களது பணிகளை கவனித்து வந்துள்ளனர். அப்போது சோதனைச் சாவடியை குறிவைத்து தீவிரவாதிகள் திடீரென வெடிகுண்டுகள் நிரம்பிய கார் மூலம் மோதினர். இதனால், காரில் இருந்த வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது.

தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த 6 அதிகாரிகள் உடல்சிதறி பலியாகினர். மேலும், 7 பேர் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத இயக்கங்களும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால், போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தாலிபான் இயக்கத்தினர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேத்தின் அடிப்படையில் தங்களது விசாரணயை தொடர்ந்து வருகின்றனர்.

ஆப்கனிஸ்தான் நாட்டில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக பன்னாட்டு ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தீவிரவாதிகள் போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நிகழ்த்திவருகின்றனர்.