புதிய அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் பொது வாக்கெடுப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், சமஷ்டி ஆட்சியைக் கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை ஆட்சியின் கீழ் அதிகாரத்தை பகிர தற்போது தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு திருத்தம் மற்றும் பொது வாக்கெடுப்புக்கு இணங்கியுள்ளதாகவும் ராஜித்த சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்கு தௌிவுபடுத்தும் கருத்தரங்கில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.