மாத்தறை கம்புருப்பிட்டிய, சபுகொட பிரதேசத்தில் நில்வலா ஆற்றில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் கம்புருப்பிட்டிய உல்லல்ல பிரதேசத்தை சேர்ந்த தருஷா தினுவர என்பவராவார்.
சிறுவன் தனது கல்லூரி அணியினருடன் ஹொக்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்துள்ளார். பின்னர் சக நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சிறுவன் நீரில் மூழ்கி மூன்று மணித்தியாலங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.