உள்ளுராட்சி சட்ட மூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில், அதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஃபைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தில் உள்ள சில சரத்துக்கள் மிகவும் பழமையானவை.
தற்கால நடைமுறைகளுக்கு ஏற்றவகையில் இந்த சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இது தொடர்பான செயற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.