இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ‘உயர்த்தும் கரங்கள்’ செயற்திட்டத்தின் கீழ் போரில் தந்தையை இழந்து, பொருளாதார நலிவான குடும்பச்சூழலைக் கொண்ட இருகுடும்பங்களுக்கு, அவர்களின் அன்றாட அத்தியவசிய தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டில் இருந்து பாடாசலையின் தூரத்தை கவனத்தில் கொண்டும் ‘துவிச்சக்கரவண்டிகள்’வழங்கி வைக்கப்பட்டன!
இதனை மன்னார் பகுதிக்கு நேற்றயதினம்(19.03.2016) சங்கத்தின் உயர்த்தும் கரங்கள் விசேட செயற்குழு நேரில் சென்று மடுபிரதேச செயலகத்தினூடாக உண்மைத்தன்மையை உறுதிசெய்து, வழங்கிவைத்தது. இந்நிகழ்வில் மடுபிரதேச செயலாளர் அவர்கள் கலந்துகொண்டு சங்கத்தின் சேவையை வாழ்த்திவைத்தார்!