ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சரத் ஏக்கநாயக்கவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்சியின் உறுப்புரிமை மற்றும் பொதுச் செயலாளர் பதவியை இடைநிறுத்துவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (22) விசாரணைக்குக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிரதிவாதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, குறித்த தடையுத்தரவு நீடிக்கப்படுவதனை எதிர்ப்பதாக அறிவித்தார்.
இருப்பினும் அக்டோபர் 6 ஆம் திகதி வரை தடை உத்தரவை நீடிக்க நீதிபதி உத்தரவிட்டார்.