இத்தாலியில் தயாரிக்கப்பட்ட தானியங்கி துப்பாக்கியுடன் அங்கொட வெலி சுதா கைது

111 0
முல்லேரியா பகுதியில் நேற்று வியாழக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில், அங்கொட வெலி சுதா எனப்படும் பிரியந்த சிறிநந்த எனப்படும் பாதாளக்குழு உறுப்பினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட அங்கொட வெலி சுதாவிடமிருந்து  இத்தாலியில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய முல்லேரியா, அங்கொட பகுதியில் உள்ள அம்பத்தலயிலுள்ள வீடொன்றை சோதனையிட்ட போது குறித்து துப்பாக்கியுடன் அங்கொட வெலி சுதா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி புரூனி மொட் 92 மி.மி. (BRUNI MOD 92mm) வகையை சேர்ந்த இத்தாலியில் தயாரிக்கப்பட்டதாகவும் அதடுன் மகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட 50 வயதுடைய நபரையும் துப்பாக்கியையும் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரியா பொலிஸாரிடம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.