போராட்ட காலப்பகுதியில் (அரகலய) வீடுகள் சேதமடைந்த அமைச்சர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டால் மே 9ம் திகதி எரிக்கப்பட்ட பேருந்துகளுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
“சுமார் 50 தனியார் பேருந்துகள் முற்றிலுமாக சேதமாகின. மேலும் 50 பேருந்துகள் பகுதியளவில் சேதமாகின. காப்புறுதி மூலம் கிடைத்த தொகை போதாது. அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஓரளவு பகுதியேனும் பேருந்து உரிமையாளர்களுக்கு கிடைக்கவில்லை. பேருந்து ஒன்றுக்கு தலா 10 மில்லியன் வீதம் 50 பேருந்துகளுக்கு 500 மில்லியனே ஆகும். இது பெரிய தொகை அல்ல என்றார்.