வரலாற்றில் முதல் முறையாக சுமார் 1500 ஓவியங்களைக் கொண்ட பாரிய ஓவியத் திருவிழா இன்று காலை (21) மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் ஆரம்பமாகியது
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இந்த மூன்று நாட்களைக் கொண்ட ஓவியத் திருவிழாவில் 21 காட்சிக்கூடங்களைக் கொண்ட 1500 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஓவியர்கள் பல்கலைக்கழகம் மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் ஆகியோரினால் வரையப்பட்ட பல்வேறு விதமான நவீன மற்றும் மரபு ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.