இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்படுவது குறித்து அமெரிக்க செனெட் குழு கண்டனம்

120 0
இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தாக்கப்படுவது குறித்து  அமெரிக்க செனெடடின் வெளிவிவகார குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்தும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றவேளை  தாக்குதலை தடுத்து நிறுத்துவத்காக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறித்தும்  கரிசனை கொண்டுள்ளோம் என செனெட் குழு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில்  அதிஸ்டவசமாக பொலிஸார் பலரை கைதுசெய்துள்ளனர் – இந்த குற்றங்களிற்கு காரணமானவர்கள் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் எனவும் செனெட்குழு தெரிவித்துள்ளது.