ஜனாதிபதி செயலகத்தின் 28 வாகனங்களுக்கு காப்புறுதி இல்லை

69 0

ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறைந்தது 28 வாகனங்கள் காப்புறுதி செய்யப்படாதவை என சமீபத்திய கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

தணிக்கை அறிக்கையின்படி, இந்த வாகனங்களில் 13 உயர் பாதுகாப்பு வாகனங்கள், ஒவ்வொன்றும் 250 முதல் 350 மில்லியன் பெறுமதியானவைதணிக்கை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாதுகாப்பு வாகனங்களின் அதிக பெறுமதி காரணமாக வருடாந்தம் ஒரு வாகனத்திற்கு 20 மில்லியன் காப்புறுதி செலுத்த வேண்டும்.

அதிக செலவுகளை கருத்தில் கொண்டு வாகனங்கள் காப்புறுதிக்காக பதிவு செய்யப்படவில்லை என ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.நாட்டில் தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைவாக செயற்படாத பட்சத்தில், அந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றுக் கொள்கை தீர்மானங்களை கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ள கணக்காய்வு அறிக்கை, அதனை செய்ய ஜனாதிபதி செயலகம் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.