ஜேர்மன் கிராமங்களில் சாண்ட்விச்சை வீசிச்செல்லும் மர்ம நபர்

185 0

ஜேர்மன் கிராமங்கள் சிலவற்றில், காரில் செல்லும் மர்ம நபர் ஒருவர் சாண்ட்விச்களை வீசிச்செல்வதால் மக்கள் எரிச்சலடைந்துள்ளார்கள்.

ஆறு மாதங்களாக தொடரும் பிரச்சினை

வடமேற்கு ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்திலுள்ள Königsborn மற்றும் Heyrothsberge என்னும் இரண்டு கிராமங்களுக்கு இடையில் காரில் பயணிக்கும் ஒருவர், கடந்த ஆறு மாதங்களாக காரிலிருந்து சாண்ட்விச்களை வீசிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

வார நாட்களில், தினமும் காலை 6.00 மணிக்கு முன் இப்படி அவர் சாண்ட்விச்களை வீசிச் செல்வதால், வேலைக்குச் செல்லும் வழியில் அவர் இப்படிச் செய்வதாக கருதப்படுகிறது.

ஜேர்மன் கிராமங்களில் சாண்ட்விச்சை வீசிச்செல்லும் மர்ம நபர் | Germans Baffled Mystery Of Highway

 

சில நேரங்களில் அப்படி வீசி எறியப்படும் சாண்ட்விச்கள் அருகிலுள்ள வீடுகளில் தோட்டத்தில் சென்று விழுவதால், அந்த வீட்டுக்காரர்கள் எரிச்சலடைகிறார்கள்.

என்ன காரணம்?

அவர் எதற்காக இப்படிச் செய்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், அந்த நபருக்கு யாரோ அன்பிற்குரியவர் ஒருவர் ஒரு சாட்விச்சைக் கொடுத்திருக்கலாம். ஆனால், அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இந்த விடயத்தை அவரால் அந்த நபரிடம் சொல்ல முடியாமல் போயிருக்கலாம். ஆகவே, அதன் பலனை அவர் இப்போது அனுபவிக்கக்கூடும் என்கிறார் மனோதத்துவ நிபுணர் ஒருவர்.

 

 

விடயம் என்னவென்றால், ஓடும் காரிலிருந்து இப்படி பொருட்களை தூக்கி வீசுவது Saxony-Anhalt மாகாணத்தில் குற்றமாகும். ஆகவே, அந்த நபர் சிக்கினால், உள்ளூர் மக்களுடைய கோபத்துக்கு ஆளாவதுடன், அவர் 400 யூரோக்கள் வரை அபராதமும் செலுத்தவேண்டியிருக்கும்.