நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் எதிரணி மோதல்

76 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து நாடாளுமன்றத்தில்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலசுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்க தவறியதை தொடர்ந்தே இந்த வாக்குவாதம் இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு குற்றம்சாட்டியவர்கள் தொடர்பில் ஒருவருடத்திற்கு முன்னர் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குற்றம்சாட்டினார்.

ஜனாதிபதி ஆணைக்குழு சிரேஸ்ட பொலிஸ்மாஅதிபர் நிலாந்த ஜெயவர்த்தன குறித்துதனது அறிக்கையில் தெரிவித்திருந்தது அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையைஎடுக்கவேண்டும் என பரிந்துரைத்திருந்தது எனவும் அவர்  நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரின் பெயரை குறிப்பிடவில்லை என  குறிப்பிட்டிருந்தார்.

நிலாந்த ஜெயவர்த்தனவை விசாரணை செய்தால்   சேர்ந்த பலர் சிக்குவார்கள்  அரசாங்கம் நிலாந்த ஜெயவர்த்தனவை விசாரணைக்கு உட்படுத்த அஞ்சுகின்றது  என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.