16 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருள் ஒருகொடவத்த கொள்கலன் முனையத்தில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் பொதி 1 கிலோ கிராம் 98 கிராம் நிறையுடையது என்பதுடன் போதைப்பொருள் பொதி பெல்ஜியத்திலிருந்து சிலாபம், வென்னப்புவ பகுதிக்கு பெறுநர் முகவரியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே பெறுநர் முகவரி போலியாது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுங்கத்துறை பேச்சாளர் சீவாலி அருகொட தெரிவித்துள்ளார்.
குறித்த போதைப்பொருள் பொதி மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கபபட்;டுள்ளதாகவும் சுங்கத்துறை பேச்சாளர் சீவாலி அருகொட குறிப்பிட்டுள்ளார்.