மருத்துவ பட்டப்படிப்புக்கு தேவையான குறைந்த தரத்தை, சட்டமயமாக்குமாறு கோரிக்கை

271 0
மருத்துவ பட்டப்படிப்புக்கு தேவையான குறைந்த தரத்தை, சட்டமயமாக்குமாறு சுகாதார அமைச்சரை கோரியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் பிரதி செயலாளர் மருத்துவர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைக்கு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்க பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இல்லாவிடின் தனியார் மருத்துவ சேவை உள்ளிட்ட சகல மருத்துவ நடவடிக்கைகளிலும் இருந்தும் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.