படல்கும்புர – பதுளை பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்றும் பவுஸரும் மோதியதில் அறுவர் காயமடைந்துள்ளனர்.
படல்கும்புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (19) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, பஸ்ஸில் பயணித்த நான்கு பயணிகளும் விபத்தில் சிக்கிய இரு வாகனங்களின் சாரதிகளுமாக காயமடைந்த ஆறு பேர் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கும்புர காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.