ஹரக்கட்டா தப்பிச் செல்லும் முயற்சிக்கு உதவி : பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயும் உறவினரும் கைது!

97 0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக்  காவலில்  வைக்கப்பட்டுள்ள “ஹரக்கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன தப்பிச் செல்ல முயற்சித்தமைக்கு உதவினார் என சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயும் உறவினர் ஒருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஹரக்கட்டா  தப்பிச் செல்லும் முயற்சிக்கு உதவியதாக கூறப்படும் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள்  தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வு  திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், குற்றப் புலனாய்வுத்  திணைக்களத்தின்  தடுப்பில் இருக்கும்போது சந்தேக நபரான ஹரக்கட்டா, பொலிஸ் விசேட  அதிரடிப்படையின் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை அபகரிக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது, ஏற்பட்ட மோதலில் காயமடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.