உயிரிழந்தவர் ரத்கம கம்மெத்தேகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஷெஹான் நிலங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குளம் ஒன்றில் சடலம் மிதப்பதாக வந்த தகவலின் பேரில், நேற்று திங்கட்கிழமை (18) மாலை அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை கரைக்குக் கொண்டு வந்தனர்.
நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவிருந்தது.