மற்றுமொரு சடலம் கண்டுபிடிப்பு!

56 0

வத்தளை, பல்லியவத்தை கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (18) பிற்பகல் கடற்கரையில் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

உயிரிழந்தவர் 65 முதல் 70 வயதுக்குட்பட்ட, 05 அடி 05 அங்குல உயரமும், மெலிதான உடலும், மஞ்சள் நிற அரை கை சட்டையும், சாம்பல் நீளமான கால்சட்டையும், வெள்ளை முடியுடன் உள்ளவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.