மின்சாரசபை சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சர் காஞ்சன கலந்துரையாடல்

55 0

இலங்கை மின்சார சபை மற்றும் வலுச்சக்தி துறையின் உத்தேச சீர்திருத்தங்கள் தொடர்பாக 35 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று கலந்துரையாடியுள்ளார்.

மின்சாரத் துறையின் சீர்திருத்தங்களின் முன்னேற்றம், புதிய உத்தேச மின்சாரச் சட்டத்தின் கட்டமைப்பு, நிலைமாறு காலக்கெடு, மனிதவள முகாமைத்துவம் மற்றும் இடமாற்றத் திட்டங்கள் குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

ஊழியர்களின் நலன்கள் மற்றும் ஓய்வூதியங்கள், சீர்திருத்த செயலகத்தை நிறுவுதல் மற்றும் வாரிசு நிறுவனங்களை நிறுவுதல், அபிவிருத்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட உதவிகள் குறித்தும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு விளக்கமளித்ததாக, அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.