நிட்டம்புவ ATM இயந்திரம் உடைக்கப்பட்டு திருட்டு!

59 0

நிட்டடம்புவ நகரில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திர கொள்ளைச்சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இயந்திரம் நேற்றிரவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 7,851,000 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அருகிலிருந்த சீசீரிவி கமெரா காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருதாகவும் நிட்டம்புவ காவல் துறையினர் தெரிவித்தனர்.