ஐ.நா முன்றலில் அனைத்துலக நாடுகளிடம் நீதி கேட்ட தமிழீழமக்கள்.

305 0

இன்று 18.9.2023 திங்கட்கிழமை nஐனிவா நகரில் அமைந்திருக்கும் ஐ.நா முன்றலில் உள்ள முருகதாசன் திடலில் பேரெழுச்சியுடன் ஒன்றுகூடிய தமிழீழமக்கள் விடுதலைக் கொட்டொலிகளை ஒலித்தபடி, விடுதலைக் கோசங்களை எழுப்பி, தூங்குவதுபோல நடித்துக் கொண்டிருக்கும் அனைத்துலக வல்லரசுகளிடமும் அவற்றை தேர்வுசெய்யும் மக்களிடமும் தங்கள் விடுதலை அவாவினை முன்வைத்தார்கள்.

தமிழீழமக்களுக்கு நடந்தது இனவழிப்பு என்பதனை வலியுறுத்தியும் அதனை காலம்காலமாக செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா இனவாத அரசையும் ,அதன் இராணுவ இயந்திரத்தையும் அனைத்துலக நீதிமன்றுக்கு கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தார்கள்.

ஆரம்ப நிகழ்வாக தியாக தீபம் லெப.; கேணல் திலீபன் அவர்களுடைய திருவுருவப் படத்தைத் தாங்கியவாறு nஐனீவா வீதியில் கொட்டொலியோடு ஊர்வலமாக வந்த மக்கள் முருகதாசன் திடலில் ஒன்றுகூடி ஐ. நா. மன்றத்தினைப் பார்த்தவாறு விடுதலைக் கோசங்களை எழுப்பினர்.

பின்பு பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை தீக்கு இரையாக்கிய ஈகைகளுக்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்ட பின்பு அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இளையவர்களின் வாழ்விட மொழிகளிலான பேச்சுக்களுடன் சிறப்புரையும் நடைபெற்றது. இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப்பாடலுடன் தமிழீழத் தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நிகழ்வு எழுச்சியுடன் நிறைவடைந்தது.