அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் இன்று இடம்பெற்ற பேரணிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மெல்பேர்னில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டுள்ள சுதேசிய அவுஸ்திரேலியர்களிற்கான அமைச்சர் லின்டா பேர்னே வரலாறு உண்மையாகவே அழைக்கின்றது என தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெருந்தொகையான மக்களை பார்த்து நான் உண்மையாகவே கண்ணீர் விடுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெருந்தொகையான மக்களை பார்த்து நான் நெகிழ்ந்துபோனேன் நீங்கள் எங்கிருக்கின்றீர்கள் உங்கள் இதயத்தில் என்ன உள்ளது உங்கள் உணர்வுகள் எப்படிப்பட்டவை என்பதை அறிந்துகொண்டேன் என தெரிவித்துள்ள அமைச்சர் நீங்களும் என்னை போல இந்த நாடு இணைந்து முன்னேறுவதை விரும்புகின்றீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மெல்பேர்னின் அரச நூலகத்திலிருந்து 60,000 பேர் பெடரேசன் சதுக்கத்தினை நோக்கி பேரணியாக சென்றனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உரைகளும் வீதி நாடகங்களும் இந்த பேரணியில் இடம்பெற்றுள்ளன.
பலர் கைதட்டியபடி யெஸ் என தெரிவித்தபடி பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
அவர்கள் பெடரேசன் சதுக்கத்திற்கு வந்ததும் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பீட்டர் கரெட் சர்வஜனவாக்கெடுப்பு அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம் என தெரிவித்தார்.
சர்வஜனவாக்கெடுப்பு குறித்து இன்னமும் தீர்மானிக்காமல் உள்ள நண்பர்கள் குடும்பத்தவர்களுடன் அது குறித்து பேசுங்கள் என அவர் பேரணியில் கலந்துகொண்டவர்களை கேட்டுக்கொண்டார்.
நாடுகள் இவ்வாறான தீர்மானங்களை வாழ்நாளில் ஒரு தடவை மாத்திரம் எடுக்கின்றன இது உங்களின் தீர்மானம் இதனை வீணடிக்க முடியாது என்பது எங்கள்அனைவருக்கும் தெரியும் நியாயமான நாடாக நாங்கள் செய்யக்கூடிய மிகவும் முக்கியமான விடயம் இதுவெனவும் குறிப்பிட்டுள்ளார்.
கன்பெராவில் ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்திற்கு முன்பாக பேரணியில் ஈடுபட்டனர்.