படுகொலை செய்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்கலாம்?

102 0

இலங்கை அரசாங்கத்தின் நீதி கட்டமைப்பானது உண்மையிலேயே நீதியுடன் செயல்பட்டு இருந்தால் தமிழர்கள் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது என எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், நீதி வழங்கும் நடவடிக்கை அசமந்தப்படுத்தப்பட்டால் வடக்கு – கிழக்கு மண் மீண்டும் கிளர்ந்தெழும், எங்களுடைய தேசம் ஒருபோதும் நீதியைக் காணாது உறங்காது எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுமார் 2000 நாட்கள் கடந்த நிலையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களை உருக்கி – தங்களை இழந்து செய்கின்ற அந்தப் போராட்டமானது இந்த மண்ணில் நீடிக்கத் தான் போகிறது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி போன்று எதிர்காலத்தில் இன்னும் பல மனிதப் புதைகுழிகள் தேசத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.

அவை எல்லாவற்றிற்கும் பன்னாட்டு விசாரணையே தீர்வாக இருக்கும். அதற்கான அநீதியும் சர்வதேச ரீதியாக இருக்கும். இதனை இலங்கையில் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது எனவும் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.