விற்பனை நிலையங்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு சிகரெட் விற் பனை செய்வதற்கு தடை விதிக்கும் முக மாக நாளை செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் விசேட பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக சுதேச வைத்திய, போசணை மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதன்பிரகாரம் குறித்த அமைச்சரவை பத்திரத்தில் இன்றைய தினம் கைச்சாத்திடவுள்ளேன்.அத்துடன் தற்போது சிகரெட் புகைப்பவர்களின் வீதம் 47 ஆக குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மல்வானை, பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாம் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையில் போதைப்பொருள் பாவனை விடயத்தில் கடுமையான சட்டதிட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூரண ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றார்.
இதன்பிரகாரம் புகைத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.இந்நிலையில் தற்போது விற் பனை நிலையங்களில் தனிநபர் தாராளமாக சிகரெட்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும். தனிநபர் ஒரு சிகரெட் கொள்வனவு செய்துகொள்வது அதிகமாக உள்ளது.இதனால் சிகரெட் விற்பனை அதிகமாக காணப்படுகின்றது.ஆனால் இதற்கு தடைவிதிக்கவுள்ளோம்.
இதற்கிணங்க ஒரு சிகரெட் கொள்வனவிற்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதன்படி இன்றைய தினம் இதற்கான அமைச்சரவை பத்திரத்தில் நான் கைச்சாத்திடவுள் ளேன். நாளை செவ்வாய்க்கிழமை அமைச் சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளேன்.
இதன்பின்னர் ஒருவருக்கு ஒரு சிகரெட் கொள்வனவு செய்ய முடியாது. மாறாக தனிநபர் சிகரெட் பக்கெட்டுகளை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும். இதனால் தனிநபரின் சிகரெட் கொள்வனவை எம் மால் கட்டுப்படுத்த முடியும். அத்துடன் தற்போது சிகரெட் புகைப்பவர்களின் வீதம் 47 வீதமாக குறைவடைந்துள்ளது என்றார்.