4ஆவது நாளாக கொழும்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

307 0

கொழும்பு, ­கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு முன்னால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 4ஆவது நாளா­கவும் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. வடக்கு கிழக்கு மக்கள் மேற்­கொண்­டு­வரும் தொடர் போராட்­டத்­துக்கு ஆத­ர­வு ­தெ­ரி­விக்­கும் மு­க­மா­கவே கொழும்பில் இந்த போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

காணா­ம­லாக்­கப்­பட்ட அனை­வ­ரையும் அர­சாங்கம் வெளிப்­ப­டுத்­த­வேண்டும், அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் உடன் விடு­தலை செய்­ய­வேண்டும்,வடக்கு கிழக் கில் அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை மக்­க­ளுக்கு மீள ஒப்­ப­டைக்­க­வேண்டும் மற்றும் பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்டம் உட்­பட சகல அடக்­கு­முறைச் சட்­டங்­க­ளையும் இரத்­துச்­செய்ய வேண்டும் என்ற பிரதான கோரிக்­கை­களை முன்­வைத்து அர­சியல் கட்­சிகள், தொழிற்­சங்­கங்கள், சிவில் அமைப்­புக்கள் இணைந்த சம உரிமை இயக்கம் இந்த எதி ர்ப்பு போராட்­டத்தை முன்­னெ­டுத்து செல்­கின்­றது.