யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை முனைப்பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் பாவனையற்றிருந்த பல நாள் படகுகிற்கு இனந்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டது.
இதனை வீதியில் நடமாடும் சேவையில் ஈடுபட்ட பருத்தித்துறை பொலிசார் அவதானித்து, குறித்த விடயம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசுங்கவின் கவனத்திற்க்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் அழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்;து.
பொலிசாரின் துரித செயற்பாட்டின் மூலம், பாரிய தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.