குருநாகலில் உள்ள பாடசாலையொன்றின் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 4 மாணவர்கள் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் 11ஆம் மற்றும் 12ஆம் தர மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் மோதலாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இம்மோதலானது பாடசாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே 4 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகிறது.