கிழக்கு மாகாண தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (16) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தனியார் வைத்தியசாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக தனியார் வைத்தியசாலை பிரதிநிதிகளுக்கு மேலதிக உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.